Wednesday, May 19, 2010

வாசித்தல் 1 வழக்கம்

மாணவர்களே! உங்கள் வகுப்புத் தோழர்கள் அல்லது தோழிகள் வாசித்துப் பதிவு செய்த பகுதியைக் கவனமாகக் கேளுங்கள். அதனை மதிப்பீடு செய்து உங்கள் கருத்துகளைத் தெரிவிக்கவேண்டும்.

அதன்பின்னர், கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளின் அடிப்படையில் சரியான அளவில் மதிப்பெண்களைத் தரவேண்டும்.

மதிப்பெண்கள் வழங்குவதற்கான குறிப்புகள்:

1. உச்சரிப்புப் பிழையின்றி வாசிப்பதற்கு 5 மதிப்பெண்கள் வழங்குக. உச்சரிப்புப் பிழையோடு வாசித்தால் பிழைகளுக்கு ஏற்ப 5 மதிப்பெண்கள்வரை குறைக்கலாம்.

2. சரியான வேகத்தில் தடுமாற்றமின்றி வாசித்தால் 5 மதிப்பெண்கள் வழங்குக. மெதுவாகவும் தடுமாற்றத்துடனும் வாசித்தால் 5 மதிப்பெண்கள்வரை குறைக்கலாம்.

3. குரல் ஏற்ற இறக்கத்துடன் உயிரோட்டமாக வாசித்தால் 5 மதிப்பெண்கள் வழங்குக. குரல் ஏற்ற இறக்கமின்றி வாசித்தால் 5 மதிப்பெண்கள்வரை குறைக்கலாம்.

பிரவின் 1 வழக்கம்:

பிரவினைத் தவிர மற்றவர்கள் பகுதியைக் கவனமாகக் கேளுங்கள். உங்களுடைய கருத்துகளையும் மதிப்பெண்களையும் (15 மதிப்பெண்கள்)Comments என்ற சொல்லைக் கிளிக் செய்து பதிவு செய்யவும்.


விஜய் 1 வழக்கம்:

விஜய் வாசித்த பகுதியை மற்றவர்கள் கவனமாகக் கேளுங்கள். உங்களுடைய கருத்துகளையும் மதிப்பெண்களையும் (15 மதிப்பெண்கள்)Comments என்ற சொல்லைக் கிளிக் செய்து பதிவு செய்யவும்.


பவனேஸ்வரி 1 வழக்கம்:

பவனேஸ்வரி வாசித்த பகுதியை மற்றவர்கள் கவனமாகக் கேளுங்கள். உங்களுடைய கருத்துகளையும் மதிப்பெண்களையும் (15 மதிப்பெண்கள்)Comments என்ற சொல்லைக் கிளிக் செய்து பதிவு செய்யவும்.


படத்தைப் பார்த்து உரையாடுவதைப் பாருங்கள்.
அதைப்போன்று நீங்களும் முயற்சி செய்யுங்களேன்.

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. விஜயின் கருத்துகள்;

    பிரவின்;
    பிரவின் படித்தது சுமாராக இருந்தது. உச்சரிப்புப் பிழைகள் அதிகம்.சரளமாக இல்லை. மெதுவாக இருந்தது.
    மதிப்பெண்கள்;9/15

    பவனேஸ்வரி;
    பவனேஸ்வரி படித்ததில் பிழைகள் குறைவு. ஓரளவு சரளம் இருந்தது. கருத்துகள் குறைவு.
    மதிப்பெண்கள்;12/15

    ReplyDelete
  3. பவனேஸ்வரியின் கருத்துகள்: பிரவின்: பிரவின் சிறிது சிரமப்பட்டு மெதுவாக படித்தான்.அவன் செய்த உச்சரிப்பு பிழைகள் அதிகம்.ஆனால்,அவன் சத்தமாக படித்தான்.அவன் சிறிது நன்றாகத்தான் படித்தான். மதிப்பெண்கள்:10/15 விஜய்: அவன் நிறைய உச்சரிப்பு பிழைகள் செய்தான். அவன் சிறிது நன்றாகத்தான் படித்தான். மதிப்பெண்கள்:9/15

    ReplyDelete
  4. பிரவினின் கருத்து;

    விஜய்: உச்சரிப்புப் பிழைகள் அதிகம். மற்றும் சரியான வேகத்தில் படிக்கவில்லை! ஆனால் குரல் ஏற்ற இறக்கம் சரியாக இருந்த்து!
    நல்ல முயற்ச்சி!

    மதிப்பெண்கள்: 9\15

    பவனேஸ்வரி: உச்சரிப்புப் பிழைகள் குறைவு! சரியான வேகத்தில் படிக்கவில்லை! ஆனால் குரல் ஏற்ற இறக்கம் ஒரளவு சரியாக இருந்தது!

    மதிப்பெண்கள்; 12\15

    ReplyDelete